தேர்தல் திட்டம் பாதிக்கப்படாது

தேர்தல் திட்டம் பாதிக்கப்படாது

1 mins read
5e6b483a-f419-49bd-907c-fd4e5ddc85c6
-

பேங்காக்: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மறைவால் அந்நாட்டு மக்கள் துயரத் தில் மூழ்கியுள்ள வேளையில் அரசாங்கப் பணிகளில் பாதிப்பு எதுவும் இருக்காது என்றும் தேர்தல் திட்டத்தில் மாற்றம் இருக்காது என்றும் மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். திட்டமிட்டபடி தேர்தல் 2017ஆம் ஆண்டு நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித் துள்ளது. அதே போல திட்டமிட்ட படி அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இன்னும் இரண்டு வாரங் களில் தேசிய நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து மன்னர் பூமிபோல் அவரது 88 வது வயதில் வியாழக்கிழமை காலமானார். அவரது மகன் பட்டத்து இளவரசர் மகா வஜிரலங்கோன் அரச முறைப்படி மன்னர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தமக்கு கால அவகாசம் தேவைப் படுவதாகக் கூறியுள்ளார். இடைக்கால ஆட்சிப் பொறுப்பை முன்னாள் பிரதமரான 96 வயது பிரேம் டின்சுலநந்தா ஏற்கவுள்ள நிலையில் அங்கு ராணுவ ஆட்சி நீடிக்கக்கூடும் என்ற கவலை மக்களிடம் அதிகரித்துள்ளது.