வெளிநாடுகளுக்குச் செல்லும் போது அந்நாட்டுச் சட்ட திட்டங்களைப் பின்பற்றி நடந்து கொள்ளுமாறு வெளியுறவு அமைச்சு சிங்கப்பூரர்களை அறி வுறுத்தியுள்ளது. வெளிநாடுகளில் சில சிங்கப்பூ ரர்கள் கைதானதைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சு நேற்று அதன் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்தது. இத்தகைய அறிவுறுத்தலை வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருப்பது இதுவே முதன் முறை. அண்மைய மாதங்களில் பல சிங்கப்பூரர்கள் வெளிநாடுகளில் போதைப் பொருள், குடிநுழைவு தொடர்பான குற்றங்களுக்காகக் கைதானதைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சு அக்கறை கொண் டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டது. எனினும் மேற்கண்ட குற் றங்களுக்காக எத்தனை சிங்கப்பூரர்கள் கைதானார்கள் எனும் தகவலை வெளியுறவு அமைச்சு வெளியிடவில்லை.
வெளிநாட்டுச் சட்டதிட்டங்களை மீறுவோர் உடனடியாக கைது நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு அவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படலாம் என்றும் சில நாடுகளில் வழக்கு பல மாதங்கள் நீடிக்கலாம் என்றும் அறிக்கையில் அமைச்சு தெரிவித்தது. வெளிநாடுகளில் சிங்கப்பூரர்களின் குற்றச்செயல்கள் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மிகு தியான அபராதம் அல்லது நீண்ட கால சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் போதை பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை கூடக் கிடைக்கலாம் என்றும் வெளியுறவு அமைச்சு சுட்டியது.

