மனைவியின் ஒப்பனை கலைந்தது; கணவர் விவாகரத்து செய்தார்

மனைவியின் ஒப்பனை கலைந்தது; கணவர் விவாகரத்து செய்தார்

1 mins read

அபுதாபி: புதிதாகத் திருமணம் செய்துகொண்ட ஒரு தம்பதியர் கடலில் நீந்தச் சென்றபோது மனைவியின் முக ஒப்பனை அழகு ஒட்டுமொத்தமாக கடல் நீரில் கலைந்தது. அவர் தன் மனைவிதானா என்பதை அக்கணவனால் அறிந்துகொள்ள முடியவில்லையாம். அவரது முகத் தோற்றத்தைப் பார்த்து அவரது கணவர் அதிர்ச்சி அடைந்ததாகக் கூறப்பட்டது. அந்தப் பெண்ணின் கண் இமை, புருவம் எல்லாம் செயற்கை என்பது கணவருக்கு அப்போது தெரியவந்தது.

அப்பெண் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார் அந்தக் கணவர். திருமணம் செய்துகொண்ட சில நாட்களிலேயே இந்த அசம்பாவிதம் நடந்தது. ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த 34 வயது ஆடவர் அரபு நாட்டைச் சேர்ந்த 28 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார்.

இவ்விருவரும் துபாயிலுள்ள அல் மம்சார் கடற்கரைக்குச் சென்றிருந்தபோது அவர்கள் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது. முக அழகுக்காக பல அறுவை சிகிச்சைகளைச் செய்துகொண்ட அந்தப் பெண் அதுபற்றி தன் கணவரிடம் பிறகு கூறிக்கொள்ளலாம் என்று நினைத்திருந்தாராம். ஆனால் இப்போது காலம் கடந்து விட்டது என்று கூறி அப்பெண் வருந்துவதாகவும் விவாகரத்தினால் அவர் மன ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனோவியல் மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.