ஜகார்த்தா: சில இந்தோனீசியர்கள் பிலிப்பீன்சில் உள்ள ஐஎஸ் ஆதரவுக் குழுக்களுடன் சேர்ந்து வருவதாக இந்தோனீசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர்களான இந்தோனீசியர்கள் சிலர் பிலிப்பீன்ஸ் குழுக்களுடன் சேர்வது கவலை அளிப்பதாக இந்தோனீசியா தெரிவித்துள்ளது. ஐஎஸ் ஆதரவாளர்களான இந்தோனீசியர்கள் சிலர் பிலிப்பீன்சில் பயிற்சி பெற்று வருவதாக இந்தோனீசிய பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் கூறினார். இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இந்தோனீசிய அதிகாரிகள் முக்கிய இடங்களில் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளனர்.
ஐஎஸ் ஆதரவுக் குழுக்களுடன் சேரும் இந்தோனீசியர்கள்
1 mins read

