ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு சுல்தானா அமினா மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட தீயால் ஆறு நோயாளிகள் மாண்டனர். இந்நிலையில், நேற்று அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள அறுவை சிகிச்சை நிலையத்தில் தீ மூண்டது. அந்தப் பிரிவிலிருந்த நோயாளிகளை நீலநிற சீருடை அணிந்த மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து அவசர அவசரமாக அப்புறப்படுத்தியதாக தி ஸ்டார் செய்தித்தாள் தெரிவித்தது.
மருத்துவமனையின் முதல் மாடியில் இருக்கும் அறுவை சிகிச்சை நிலையத்திலிருந்து புகைமூட்டம் வெளியானதைக் காண முடிந்ததாக தொண்டூழியர் ஒருவர் கூறினார். பின்னர், அந்த மருத்துவமனைக்குள் தீயணைப்பு வாகனம் சென்றதைக் காண முடிந்ததாகவும் தி ஸ்டார் செய்தி தெரிவித்தது.

