அண்டார்டிகா கடலில் உள்ள ராஸ் கடலில் பெங்குவின் ஒன்று உறைந்திருக்கும் பனிக்கட்டியை நோக்கி பாய்ந்து செல்கிறது. அண்டார்டிகா கடற்பகுதியின் இயற்கை சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் உலகின் ஆகப் பெரிய கடற்பகுதியை உருவாக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கு நீண்டகாலமாக எதிர்ப்புத் தெரிவித்து வந்த ரஷ்யா தனது எதிர்ப்பை மீட்டுக்கொண்டதால் இதற்கான ஒப்பந்தம் சாத்தியமாகியுள்ளது. ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா தீவின் ஹோபார்ட் நகரில் இதற்கான ஒப்பந்தம் பல்லாண்டு பேச்சுவார்த்தைகளுக்கு பின் கையெழுத்தானது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளின் ஆதரவுடன் உலகின் ஆகப் பெரிய கடற் பாதுகாப்பு பகுதி அமைக்கப்படும். இதன் பரப்பளவு 1.55 மில்லியன் சதுர கிலோமீட்டர் என்றும் இதில் 1.12 மில்லியன் கிலோமீட்டர் பகுதி மீன்பிடி அற்ற பகுதியாக விளங்கும் என்றும் கூறப்படுகிறது. கோப்புப்படம்
அண்டார்டிகாவில் பாதுகாப்பு கடல் பகுதி
1 mins read
-

