இத்தாலியில் நிலநடுக்கம்: கட்டடங்கள் இடிந்து விழுந்தன

இத்தாலியில் நிலநடுக்கம்: கட்டடங்கள் இடிந்து விழுந்தன

1 mins read

ரோம்: இத்தாலியை நேற்று உலுக்கிய நிலநடுக்கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் கூறினர். இத்தாலியின் மத்தியப் பகுதியை நேற்று 6.6 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறி னர். நிலநடுக்கத்தின்போது சிறிய மற்றும் பெரிய நகரங்களில் உள்ள பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. கடந்த இரண்டு மாதங்களில் தொடர்ச்சியாக பல நிலநடுக்கங்கள் இத்தாலியை உலுக்கிய நிலையில் நேற்று மீண்டும் சக்திவாய்ந்த நில நடுக்கம் உலுக்கியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் உடனடி யாகத் தெரியவில்லை. இருப்பினும் இந்த நிலநடுக்கம் பல இடங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக இத்தாலியின் அவசர சேவைப் பிரிவு தெரிவித் துள்ளது. இத்தாலியை கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி உலுக்கிய நிலநடுக்கத்தில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். அந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டன. அந்த நிலநடுக்கத்தால் பல நகரங்களும் கிராமங்களும் பாதிக்கப்பட்டன.