தென்கொரிய அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்தார் அதிபர்

தென்கொரிய அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்தார் அதிபர்

1 mins read

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹே தலைமையிலான அரசாங்கத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில் அவர் தமது அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார். புதிய பிரதமரை அவர் நியமித்துள்ளார். அத்துடன் அமைச் சரவையில் இரண்டு புதிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். கிம் பியாங் ஜூன் என்பவர் நாட்டின் புதிய பிரதமராகவும் தென்கொரிய அரசின் நிதித்துறை செயலாளராக பணியாற்றிவந்த ஜிம் ஜாங் யாங் என்பவர் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சராக புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதிபரின் நெருங்கிய நண்பரான சோய் சூன் சில் என்ற மாது அரசு விவகாரங்களில் தலையீட்டு ஊழலுக்கு வழிவகுத்து வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியைத் தொடர்ந்து அவர் தற்பபோது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.