வாஷிங்டன்: அமெரிக்கத் தேர்தல் நெருங்கும் வேளையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரியைவிட ஒரு விழுக்காடு முன்னணியில் இருப்பதாக ஆகக் கடைசி கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இதற்கு முன்பு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் ஹில்லரி நான்கு விழுக்காடு முன்னணியில் இருந்தார். அவரது மின்னஞ்சல் விவகாரத்தை மீண்டும் விசாரிக்கப்போவதாக அமெரிக்க புலனாய்வுத் துறை அறிவித்தது முதல் அவரது செல்வாக்கு சரிந்து வருகிறது. டிரம்பிற்கும் ஹில்லரிக்கும் ஆதரவு சமமாக இருந்துவந்த நிலையில் திடீரென்று டிரம்ப் ஒரு விழுக்காடு முன்னணி யில் உள்ளார். முக்கிய மாநிலங்களில் அவருக்கு ஆதரவு கூடியுள்ளது.
டோனல்ட் டிரம்ப் முன்னிலை
1 mins read

