2.8 மி.சலவை இயந்திரங்களை திரும்பப் பெற்றது சாம்சுங் நிறுவனம்

2.8 மி.சலவை இயந்திரங்களை திரும்பப் பெற்றது சாம்சுங் நிறுவனம்

1 mins read

நியூயார்க்: சாம்சுங் நிறுவனம் தயாரித்த குறிப்பிட்ட சில மாதிரி வகை சலவை இயந்திரங்களில் தீப்பிடிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் அமெரிக்காவில் 2.8 மில்லியன் சலவை இயந்திரங்களை திரும்பப் பெற்றுள்ளது. இந்த எண்ணிக்கை சென்ற மாதம் சாம்சுங் நிறுவனம் திரும்பப் பெற்ற கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் தொலைபேசிகளின் எண்ணிக்கையைவிட அதிகமாகும். கோளாறு இருப்பதாகக் கூறப்படும் சலவை இயந்திரங்கள் அனைத்தும் மேல் பக்க மூடியைக் கொண்டவையாகும். சாம்சுங் சலவை இயந்திரங்கள் குறித்து 733 புகார்கள் வந்திருந்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினர்.