துருக்கியில் பிடிபட்ட 2 மலேசியர்களுக்கு ஐஎஸ் நிதியுதவி வழங்கியது

துருக்கியில் பிடிபட்ட 2 மலேசியர்களுக்கு ஐஎஸ் நிதியுதவி வழங்கியது

1 mins read
749d81c8-fa4f-4cdd-a69f-c8a66e0ac1e5
-

கோலாலம்பூர்: மலேசியாவைச் சேர்ந்த இரண்டு ஐஎஸ் பயங்கரவாதிகள் சிரியாவுக்குச் செல்வதற்கான செலவுகளுக்காக மலேசியாவைச் சேர்ந்த மற்றொரு ஐஎஸ் பயங்கரவாதியான முகமது வாண்டி முகமது ஜெடி $1,642 வழங்கியது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. சிரியாவுக்குச் செல்லும் வழி யில் இவ்விரு பயங்கரவாதிகளும் சென்ற வாரம் இஸ்தான்புல்லில் பிடிபட்டனர். அவர்களில் ஒருவர் ஜோகூரைச் சேர்ந்த 29 வயது தொழில்நுட்பர்.

அவர் சிரியா வுக்குக் கிளம்பிச் செல்வதற்கு முன்பாக 20,000 மலேசிய ரிங்கிட்டைக் கடன்பெற்றதாகக் கூறப்படுகிறது. சரவாக்கில் பணிபுரியும் 24 வயது நபரையும் உடன் அழைத்துக் கொண்டு அவர் சிரியாவுக்குக் கிளம்பினார். தற்போது சிரியாவில் இருக்கும் முகமது வாண்டி இவ்விருவரையும் 'டெலிகிராம்' எனும் செயலி வழியாகத் தொடர்புகொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக புக் கிட் அமான் பயங்கரவாத எதிர்ப்பு சிறப்புக் குழுவின் துணைத் தலைவர் அயோப் கான் கூறினார்.

துருக்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த இரண்டு ஐஎஸ் போராளிகளை (இருவரில் ஒருவர் வலமிருந்து இரண்டாவது) மலேசிய போலிசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். படம்: தி ஸ்டார்