கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல விரும்பும் சில அமெரிக்கர்கள்

கனடா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்ல விரும்பும் சில அமெரிக்கர்கள்

1 mins read
Google News Preferred Icon

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விட்ட நிலையில் சில அமெரிக்கர்கள் கனடா மற்றும் நியூசிலாந்திற்குச் செல்வது குறித்து பரிசீலிக்கத் தொடங்கிவிட்டதாக பிலிப்பின் ஸில் பத்திரிகை ஒன்று அதன் இணையப் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

டிரம்ப் வெற்றி பெற்றதால் அமெரிக்கர்கள் மீண்டும் கனடாவுக்குச் செல்ல தடை விதிக்கப்படுமோ என்ற அச்சம் சில அமெரிக்கர்களின் மனதில் எழுந்துள்ளது. இதனால் பலரும் ஒரே நேரத்தில் கனடா குடியேற்ற இணையதளத்தை பார்வையிட்டு, அதில் சந்தேகங்களையும் கவலைகளையும் பதிவிட்டனர். இதனால் கனடா குடியேற்ற இணையதளம் முடங்கியது.