டிரம்ப் வெற்றி: அதிர்ச்சியில் உலக நாடுகள்

டிரம்ப் வெற்றி: அதிர்ச்சியில் உலக நாடுகள்

1 mins read
e2eac8dd-7f17-4d0e-9339-a984f6c00929
-

வா‌ஷிங்டன்: அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெற்று உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது வெற்றி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ள நிலையில் அவருக்கு வாழ்த்துகளும் வந்தவண்ணமாக உள்ளன. அரசியல் பின்னணி மற்றும் அனுபவம் இல்லாத ஒரு தொழிலதிபர் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்களின் மனதை ஈர்த்து வெற்றி பெற்றிருப்பது உலக நாடுகளை பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் புதிய அதிபர் டிரம்ப் என்பதை பலரால் இன்னும் நம்பமுடியவில்லை. இந்நிலையில் ரஷ்ய அதிபர் புட்டின், வெற்றி பெற்ற டிரம்பிற்கு தமது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டுள்ளார். டிரம்பின் வெற்றியை வரவேற்பதாக ரஷ்ய தேசிய விடுதலை ஜனநாயகக் கட்சியின் தலைவர் விளாடிமிர் ஸிரினோவ் ஸ்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையே பிரான்சில் வலது சாரி தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர் ஜுன் லி பென், வெற்றி பெற்ற டிரம்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

டிரம்பின் ஆதரவாளர்கள் நியூயார்க்கில் வெற்றிக்களிப்பில் ஈடுபட்டனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பலர் நியூயார்க் பேரணியில் கலந்துகொண்டனர். ஆப்ரிக்க அமெரிக்கர்களின் வாக்குகளைப் பெறுவதில் டிரம்ப் ஆரம்பத்திலிருந்தே கவனம் செலுத்தி வந்தார். தமது வெற்றிக்கு ஆப்ரிக்க அமெரிக்க வாக்காளர்களின் வாக்குகள் தேவை என்றும் அவர் கூறி வந்தார். படம்: ராய்ட்டர்ஸ்