பெர்சே பேரணியில் வன்முறை வெடிக்கும் என சிவப்பு சட்டைக்காரர்கள் மிரட்டல்

பெர்சே பேரணியில் வன்முறை வெடிக்கும் என சிவப்பு சட்டைக்காரர்கள் மிரட்டல்

1 mins read
cf5b3a21-b4c0-4fd4-977e-94d4f68f43da
-

கோலாலம்பூர்: மலேசியாவில் ஊழலுக்கு எதிராகவும் பிரதமர் நஜிப் ரசாக் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாகவும் இம் மாதம் 19ஆம் தேதி பேரணி ஒன்றை நடத்த பெர்சே அமைப்பு திட்டமிட்டுள்ளது. இந்தப் பேரணியை எதிர் கொள்ள தயாராகி வருகிறது ஒரு சிவப்பு சட்டை இயக்கம்.

இந்த இயக்கத்தின் தலை வரான ஜமால் யூனுஸ் என்பவர் பெர்சே பேரணியை எதிர்த்துத் தமது இயக்கத்தினர் களத்தில் இறங்கும்போது "வன்முறை உட்பட எதுவும் நடக்கலாம்," என எச்சரிக்கை விடுத்துள்ளார். இவரையும் இவரது இயக்கத் தையும் ஆளும் கட்சியின் அடி யாட்கள் கூட்டம் என்று பலரும் ஒதுக்கி வைத்தாலும் இவருடைய போராடும் உத்தியும் இன ரீதியி லான உணர்ச்சிகளைத் தூண்டும் பிரசாரமும் அரசியல் வன்முறையை அதிகம் கண்டிராத மலேசியாவில் பலரை கவலையடைய வைத் துள்ளன.

நவம்பர் 5ஆம் தேதி செய்தி இணையத்தளமான 'மலேசிய கினி' அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்ட ஜமால் யூனுஸ். கோப்புப் படம்: ஏஎஃப்பி