மகாதீர்: எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

மகாதீர்: எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்

1 mins read
b28c60aa-f080-47df-b3d7-33196259febf
-

கோலாலம்பூர்: மலேசியாவின் அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு அம்னோ தலைமையிலான தேசிய முன்னணியை நேரடிப் போட்டியில் எதிர்கொள்ள வேண் டும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது அறை கூவல் விடுத்துள்ளார். மலேசிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே கட்சியாக, ஒரே சின்னத்தின்கீழ் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று மூன்று கட்சிகள் அடங்கிய கூட்டணியின் தேசிய மாநாட்டில் நேற்று அவர் கலந்துகொண்டு பேசினார். "நமது நோக்கம் பிரதமர் நஜிப் ரசாக்கை பதவியிலிருந்து அகற்று வது. அதற்கு நாம் ஓரணியில் திரள வேண்டும். "நம்மால்தான் நஜிப் ரசாக்கை தடுத்து நிறுத்த முடியும். நாட்டில் ஜனநாயகத்தை சீர்திருத்தி அமைப் பதே நமது விருப்பம்," என்று அவர் கூறினார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது. படம்: ஓங் கியான் மிங்/ஃபேஸ்புக்