பசிபிக் வர்த்தக உடன்பாடு: அமெரிக்க நாடாளுமன்ற

பசிபிக் வர்த்தக உடன்பாடு: அமெரிக்க நாடாளுமன்ற

1 mins read

ஒப்புதலைப் பெறுவது நிறுத்திவைப்பு வா‌ஷிங்டன்: ஆசிய நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக உடன்பாடு குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகளை அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் நிறுத்திவைத்துள்ளது. அந்த உடன்பாடு குறித்து முடிவெடுக்கும் பொறுப்பு திரு டிரம்ப் மற்றும் குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்று ஒபாமாவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் வாரத்தில் பெருவில் நடைபெறவுள்ள வட்டார உச்சநிலைக் கூட்டத்தில் திரு ஒபாமா கலந்துகொள்ளும்போது அந்த உடன்பாடு குறித்த அமெரிக்காவின் நிலையை எடுத்துரைப்பார் என்று நிர்வாக அதிகாரிகள் கூறினர்.