பாக்தாத்: மோசுல் நகரில் ஐஎஸ் குழுவினரின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதாக ஐநா தகவல் தெரிவித்தது. ஐஎஸ் போராளிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பொதுமக்களில் 40 பேரைக் சுட்டுக் கொன்றதாகவும் அவர் களின் சடலங்களை மின் கம்பங் களில் தொங்கவிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த 40 பேரும் தேச துரோக செயலில் ஈடுபட்டதாக ஐஎஸ் குற்றம் சாட்டியுள்ளது. மோசுல் நகரில் வசிக்கும் மக்கள் கைத்தொலைபேசிகளை பயன்படுத்த ஐஎஸ் தடை விதித்துள்ளது. அத்தடையை ஒருவர் புறக்கணித்ததற்காக பொது இடத்தில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
மோசுல் நகரில் ஐஎஸ் போராளிகளின் அட்டூழியம்
1 mins read

