பதவி ஏற்க ஆயத்தமாகும் டிரம்ப் குழுவில் மீண்டும் அதிரடி மாற்றங்கள்

பதவி ஏற்க ஆயத்தமாகும் டிரம்ப் குழுவில் மீண்டும் அதிரடி மாற்றங்கள்

1 mins read
e3e52a8e-bc46-4c09-8ea8-4f8a7a928485
-

நியூயார்க்: அமெரிக்காவில் சென்ற வாரம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கோடீஸ்வரரான டோனல்ட் டிரம்ப், பதவி ஏற்பதற்கு தயாராகிவரும் தமது குழுவை மீண்டும் மாற்றி அமைத்துள்ளார். இரண்டாவது முறையாக அவர் அக்குழுவில் மாற்றங்களைச் செய்துள்ளார். அமெரிக்கத் துணை அதிபராக பதவி ஏற்கவுள்ள மைக் பென்ஸ் அக்குழுவின் தலைவராக நிய மிக்கப்பட்டுள்ளார். சென்ற வாரம் நியூ ஜெர்சி ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி அக்குழுவின் தலைவராக நியமிக் கப்பட்டிருந்தார்.

தற்போது அவருக்குப் பதிலாக அந்தப் பதவியில் திரு மைக் பென்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒருவரும் மேலும் ஒரு முக்கியப் பேர்வழியும் டிர்ம்பின் குழுவி லிருந்து நீக்கப்பட்டுள்ளனர். உளவுத் துறை இயக்குநராக நிய மிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்பட்ட மிக்சிகனைச் சேர்ந்த முன்னாள் அமெரிக்கப் பிரதிநிதி மைக் ரோஜர்ஸ் திடீரென்று பதவி ஏற்புக் குழுவி லிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

திரு டிரம்பிற்கு எதிராக வா‌ஷிங்டனில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது மாணவர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்