பாகிஸ்தான் அணு ஆயுதப் பதுக்கல் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள்

பாகிஸ்தான் அணு ஆயுதப் பதுக்கல் குறித்து அமெரிக்க விஞ்ஞானிகள்

1 mins read

வா‌ஷிங்டன்: பாகிஸ்தான் அணு ஆயுதங்களைப் பதுக்கி வைத்திருக்கும் விவரங்கள் குறித்து அமெரிக்க விஞ்ஞானி கள் சில விவரங்களை வெளியிட்டுள்ளனர். விண்வெளி படங்கள் சிலவற்றை ஆராய்ந்த அவர்கள் பாகிஸ்தான் வசம் 130க்கும் 140க்கும் இடைப்பட்ட அணு ஆயுதக் குவிப்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். மேலும், அமெரிக்க வழிகாட்டி விதிகளை மீறி, அணு ஆயுதங்களைப் பயன்படுத்து வதற்கு ஏதுவாக எஃப்-16 போர் விமானங்களை பாகிஸ்தான் மாற்றி அமைத்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள னர்.

மேலும், பிரான்சில் தயாரிக்கப்பட்ட மிராஜ் வகை விமானத்தில் ஏவுகணைகளை வீசுவதற்கான சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர்கள் அணு ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடத்தையும் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டனர். மேற்கு கராச்சி பகுதியில் உள்ள மஸ்ரூர் விமானத் தளத்தில் பெரியதொரு பாதாளப் பகுதி இருப்பதாகவும் போர் விமானங்களோடு பொருத்தப்படக் கூடிய அணு ஆயுதங்கள் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாகவும் அமெரிக்க விஞ்ஞானிகளின் அறிக்கை தெரிவிக்கிறது. அந்த விமானத் தளத்தின் செயற்கைக்கோள் படத்தையும் அவர்கள் வெளியிட்டனர்.