சோல்: ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய அதிபர் பார்க் கெயுன் ஹை பதவி விலக வலி யுறுத்தி நேற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிட்டத்தட்ட அரை மில் லியன் மக்கள் தலைநகர் சோலில் ஒன்று திரண்டு எதிர்ப்புப் போராட் டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிபருக்கு எதிரான இப் போராட்டம் நான்காவது வாரத்தை எட்டி உள்ளது. வாரந்தோறும் நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் தென் கொரிய வரலாற்றில் ஆகப் பெரி யதாகக் கருதப்படுகிறது. கடந்த 1980ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனநாயக ஆதரவுப் போராட்டத் திற்குப் பின்னர் அதிபர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திரளான மக்கள் பங்கேற்று வருகின்றனர். கடந்த சனிக்கிழமை நடத்தப் பட்ட ஆர்ப்பாட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் திரண்ட தாக ஏற்பாட்டாளர்கள் கூறினர். இதனால் போராட்டத்தைச் சமாளிப்பதில் அதிகாரிகள் சிரமங் களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கிடையே, பதவி விலகும் கோரிக்கையை அதிபர் பார்க் நிராகரித்து வருகிறார்.
அதிபர் பதவி விலக வலியுறுத்தி தென் கொரியாவில் 4வது வாரமாகப் போராட்டம்
1 mins read
-

