சோல்: தென்கொரிய அதிபரின் மூன்று உதவியாளர்கள் மீது ஊழல் விவகாரம் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அதிபர் பார்க் கியன் ஹை பதவி விலக வேண்டும் என்று தென்கொரியாவில் ஆர்ப்பாட்டங்கள் நீடிக்கும் வேளையில் அந்த மூவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதிபரின் நெருங்கிய தோழி சோய் மீதும் மற்றொருவர் மீதும் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் ரகசிய ஆவணத் தகவல்களை கசியவிட்டதாக மற்றொருவர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். தென்கொரிய சட்டப்படி அதிபர் பதவியில் ஒருவர் இருக்கும்போது அவர் மீது குற்றம் எதுவும் சாட்டமுடியாது.
தென்கொரிய அதிபர் பார்க்கின் மூன்று உதவியாளர்கள் மீது குற்றச்சாட்டு
1 mins read

