தடுப்புக் காவலுக்கு எதிராக மரியா சின்னின் வழக்கறிஞர் மனு தாக்கல்

தடுப்புக் காவலுக்கு எதிராக மரியா சின்னின் வழக்கறிஞர் மனு தாக்கல்

1 mins read

கோலாலம்பூர்: பெர்சே அமைப்பின் தலைவர் மரியா சின் அப்துல்லா புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 28 நாட்களுக்கு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். மரியா சின்னுக்கு எதிராக புதிய பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தாங்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாக வழக்கறிஞர்களில் ஒருவரான அம்பிகா ஸ்ரீனிவாசன் கூறினார்.

கோலாலம்பூரில் கடந்த சனிக்கிழமை பெர்சே பேரணி நடைபெறுவதற்கு முதல் நாளே மரியா சின் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மரியா சின்னை விடுவிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் சுமார் 40 பேர் நேற்று புக்கிட் அமான் போலிஸ் நிலையம் வரை ஊர்வலமாகச் சென்றதாகத் தகவல்கள் கூறின.