ஈராக் தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு

ஈராக் தாக்குதலில் பலி எண்ணிக்கை உயர்வு

1 mins read

பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி தாக்குதல் நடத்தியதில் சுமார் 100 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் போலிசார் கூறினர். அத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. ‌ஷியா முஸ்லிம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டிருப்பதாக போலிசார் கூறினர். ஈராக்கில் ‌ஷியா பிரிவினரின் வழிபாட்டுத் தலம் கர்பாலா நகரில் உள்ளது. வியாழக்கிழமை கர்பாலா வில் வழிபாடு முடித்துவிட்டு யாத்ரீகர்கள் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பாக்தாத் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வெடி குண்டு நிரப்பப்பட்ட லாரியை ஐஎஸ் போராளி ஒருவன், யாத்ரீகர்களின் பேருந்து மீது மோதி வெடிக்கச் செய்ததில் பலர் உயிரிழந்தனர்.