மன்னர் பொறுப்பை ஏற்க இளவரசருக்கு அழைப்பு

மன்னர் பொறுப்பை ஏற்க இளவரசருக்கு அழைப்பு

1 mins read
cef9dd5d-1695-40cb-bbd7-131d9943a9c3
-

பேங்காக்: தாய்லாந்தின் புதிய மன்னராக பட்டத்து இளவரசர் வஜிரலங்கோன் பதவி ஏற்பார் என்று அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. முன்னதாக ஒன்றுகூடிய அமைச்சரவை உறுப்பினர்கள் முறையாக, பட்டத்து இளவரசர் வஜிரலங்கோன் புதிய மன்னராக பொறுப்பேற்பதை உறுதிப் படுத்தியதும் அவரது பெயரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று காலை கூடிய சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் புதிய மன்னராக பட்டத்து இளவரசர் வஜிரலங்கோன் பொறுப்பேற்பார் என்று நாடாளுமன்ற அவைத் தலைவர் ஃபோம்பெட்ச் விசிட் சோய்சாய் அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று புதிய மன்னருக்கு தங்கள் வாழ்த்து களை தெரிவித்துக்கொள்ளுபடி ஃபோம்பெட்ச் கேட்டுக்கொண்டார். அவரது அந்த அறிவிப்பைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பிய வண்ணம் "புதிய மன்னர் நீடூழி வாழ வேண்டும்" என்று வாழ்த் தினர். மன்னராக பதவி ஏற்றுக் கொள்ளுமாறு பட்டத்து இளவரசர் வஜிரலங்கோனுக்கு அழைப்பு விடுக்கவிருப்பதாக திரு ஃபோம்பெட்ச் கூறினார்.

இளவரசர் வஜிரலங்கோன். படம்: ராய்ட்டர்ஸ்