பதவி விலக முன்வந்த தென்கொரிய அதிபர்

பதவி விலக முன்வந்த தென்கொரிய அதிபர்

1 mins read
9a5fa6f1-3752-4b2d-921b-29bd1245b1ad
-

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹை பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளார். அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்ன தாகவே தாம் பதவி விலக விருப்பதாக திருவாட்டி பார்க் அறிவித்துள்ளார். தமது எதிர்காலம் குறித்து முடிவெடுக்கும் பொறுப்பை நாடாளுமன்றத்திடம் விட்டு விட்ட தாகவும் அவர் கூறியுள்ளார்.

அதிகாரத்தை மாற்றிவிடுவது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரிய நட வடிக்கைகளை எடுத்த பின்னர் பதவியிலிருந்து தான் விலகு வதாக அவர் அறிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரை யில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பார்க் கியன் ஹை.