வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கு மிஷெல் ஒருபோதும் போட்டியிடமாட்டார் என்று அதிபர் ஒபாமா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அமெரிக்கத் தலைமகள் மிஷெல் ஒபாமா அடுத்த தேர்தலில் போட்டியிடுவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த வேளையில் திரு ஒபாமா தன் மனைவி அதிபர் பதவிக்கு என்றுமே போட்டியிடமாட்டார் என்று கூறியுள்ளார். "மிஷெல் மிகவும் திறமையானவர் என்பது எனக்குத் தெரியும். அமெரிக்க மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் அவர். ஆனாலும் அரசியலில் அவர் இறங்க மாட்டார்," என்று திரு ஒபாமா கூறினார். அமெரிக்க மக்கள் மத்தியில் அமோக ஆதரவைப் பெற்றுள்ள மிஷெல் ஒபாமா அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி வெள்ளைமாளிகையை விட்டுச் செல்வார்.
ஒபாமா: அமெரிக்க அதிபர் பதவிக்கு மிஷெல் ஒருபோதும் போட்டியிடமாட்டார்
1 mins read

