மலேசியாவில் விரைவில், எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என்று அந்நாட்டுப் பிரதமர் நஜிப் ரசாக் அறிவித்து இருக்கிறார். பெரும் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கூறி தம்மைப் பதவி விலக வலியுறுத்தும் குரல் களுக்குச் செவிசாய்க்கப்போவது இல்லை என்றும் இறக்கும் வரை போராடுவேன் என்றும் திரு நஜிப் முழங்கியிருக்கிறார். திரு நஜிப் தலைமையிலான தேசிய கூட்டணி ஆட்சி 2018 ஜூன் மாதம் வரை தொடரலாம் என்ற நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்று அவர் கோடிகாட்டினார். ஆளுங்கட்சியான அம்னோ வின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது. அக்கட்சியின் சுமார் 2,600 பேராளர்களுக்கு மத்தியில் உரையாற்றிய அவர், கட்சியினர் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.
எந்த நேரத்திலும் பொதுத் தேர்தல்: மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் அறிவிப்பு
1 mins read
-

