காணாமல் போன விமானம்; பாத்தாம் அருகே உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

காணாமல் போன விமானம்; பாத்தாம் அருகே உடற்பாகங்கள் கண்டுபிடிப்பு

1 mins read
8c0a78bc-0d86-466e-a0a6-ceedf06c89c1
-

ஜகார்த்தா: இந்தோனீசிய காவல் துறையைச் சேர்ந்த விமானம் ஒன்று காணாமல் போனது. இந்த நிலையில் பாத்தாம் அருகே உள்ள கடல் நீரில் உடற்பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இதனால் விமானத்தில் பயணம் செய்த காவல்துறையினர் இறந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று 13 பேரை ஏற்றிச்சென்ற விமானம் காணாமல் போனது. பங்கா பெலிடுங்கிலிருந்து பாத்தாமை நோக்கி அந்த விமானம் பறந்துகொண்டிருந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேகரிக்கப்பட்ட உடற்பாகங்களை அதிகாரிகள் கொண்டு செல்கின்றனர். படம்: ஏஎஃப்பி