ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக அறைகூவல்

ரோஹிங்யா மக்களுக்கு ஆதரவாக அறைகூவல்

1 mins read
d13abd9b-b900-4d72-b1a7-d4a6f491d6d5
-

கோலாலம்பூர்: மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் நடத்தப் படும் விதத்துக்கு எதிராக நேற்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற பேரணியில் ரோஹி ங்யா அகதிகள் உட்பட ஆயிரக் கணக்கான மலேசியர்கள் பங் கேற்றனர். இத்தகைய நடவடிக்கைகள் உள்விவகாரங்களில் தலையிடு வதாகும் என்று ஏற்கெனவே மியன்மார் எச்சரித்திருந்தது. ஆனால் அதையும் மீறி பேரணியில் எதிர்க்கட்சியான பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்குடன் பிரதமர் நஜிப் ரசாக் சேர்ந்துகொண்டார். ஆளும், எதிர்க்கட்சி ஆகிய இரு தரப்பிலிருந்தும் உயர் மட்டத் தலைவர்கள் பலரும் பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பேசிய பிரதமர் நஜிப், "என்னை அவர்கள் எச்சரித் தார்கள். நான் கவலைப்படவில்லை. சமூகம், மலேசிய மக்களின் பிரதி நிதியாக இங்கு நிற்கிறேன்," என்று முழங்கினார்.

மியன்மாரில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக அறைகூவல் விடுத்த மலேசிய பிரதமர் நஜிப். படம்: ஏஎஃப்பி