கராச்சி ஹோட்டலில் தீ: 11 பேர் பலி; பலர் காயம்

கராச்சி ஹோட்டலில் தீ: 11 பேர் பலி; பலர் காயம்

1 mins read
a1ff6544-da92-43e4-b821-41cb1a86bad3
-

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் நேற்று மூண்ட தீயில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததாகவும் 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த தாகவும் ஊடகத் தகவல்கள் கூறின.

ரீஜன்ட் பிளாசா ஹோட்டலின் கீழ்த்தளத்தில் உள்ள சமையல் அறையில் தீ மூண்டதாகவும் இதனால் அந்த ஹோட்டலின் மேல்மாடி அறைகளில் இருந்த விருந்தினர்கள் வெளியில் வர முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் ஆங்கில மொழி நாளேடு ஒன்று செய்தி வெளி யிட்டுள்ளது. அந்த ஹோட்டலில் 400 அறைகள் உள்ளன.