வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கவுள்ள டோனல்ட் டிரம்ப் சென்ற வாரம் தைவான் அதிபருடன் தொலைபேசியில் நேரடியாகப் பேசியதால் சீனா சினமடைந்துள்ள வேளையில் சீனாவை அமைதிப்படுத்துவதில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது. "ஒரே சீனா" கொள்கைக்கு அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாடு தொடரும் என்று அமெரிக்க அதிகாரிகள் சீனாவுக்கு உறுதியளித்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. சீனாவின் கொள்கையையும் தென்சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளையும் திரு டிரம்ப் கடுமையாகச் சாடியிருந்த வேளையில் வெள்ளை மாளிகை யின் இந்த அறிவிப்பு வெளி வந்துள்ளது. அமெரிக்க அதி பராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட டோனல்ட் டிரம்ப்பின் செயல் களுக்கு உண்மையான நோக்கம் என்ன என்பதைத் தீர்மானிப்பது மிகவும் சிரமமாக உள்ளது என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜோஸ் எர்னஸ்ட் கூறினார்.
சீனாவுக்கு மீண்டும் வெள்ளை மாளிகை உறுதி
1 mins read

