பேங்காக்: தென்தாய்லாந்து பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் அங்கு பல இடங்களில் மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கில் சிக்கி 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுற்றுலாத் தலங்களான கோ சாமுய், பாஹான் தீவுகளைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இத் தீவுகளுக்கு வருவார்கள். இந்த நேரத்தில் அவ்விரு தீவுகளையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பட்டானி மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின்போது காணாமல்போன இரு சிறுவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ள வேளையில் மக்கள் அந்த இடத்தில் கூடியுள்ளனர். படம்: ஏஎஃப்பி

