ஜோகூர் சுல்தானின் பேரனாக ஆள்மாறாட்டம் செய்தார்: சிங்கப்பூர் இளையர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் சுல்தானின் பேரனாக ஆள்மாறாட்டம் செய்தார்: சிங்கப்பூர் இளையர் மீது குற்றச்சாட்டு

1 mins read

ஜோகூர் சுல்தானின் பேரப் பிள்ளை போல ஆள்மாறாட்டம் செய்தார் என்று பதின்ம வயது சிங்கப்பூர் ஆடவர் மீது ஜோகூர் பாரு சிறார் குற்றவியல் நீதி மன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டது. தனது 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடக இணையப் பக்கம் வழியாக அந்த 15 வயது இளை யர் தான் 'ஜோகூர் சுல்தானின் பேரன்' என்று குறிப்பிட்டிருந்த தாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தைப் பின்தொடர்பவர்கள், கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தம்போயில் உள்ள 'பிளாசா அங்சானா' கடைத்தொகுதியில் சுற்றித் திரிந்த அவரை அடை யாளம் கண்டனர். இதையடுத்து, அன்றே அந்த இளையர் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்றுவரும் அந்த இளையர் மீது தண்டனைச் சட்டப் பிரிவு 419ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றம் நிரூ பிக்கப்பட்டால் அவருக்கு அதிக பட்சம் ஏழாண்டு வரை சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். ஆயினும், தன் மீதான குற்றச் சாட்டை அவர் ஒப்புக்கொள்ள வில்லை.