தென்கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்ய வாக்கெடுப்பு

தென்கொரிய அதிபரை பதவி நீக்கம் செய்ய வாக்கெடுப்பு

1 mins read
48c66387-00b4-4f13-a96a-fbbf0eeb6fe3
-

சோல்: தென்கொரிய அதிபர் பார்க் கியென்- ஹை (படம்) மீதான ஊழல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து அவர் மீது அரசாங் கத்திற்கு எதிராக முறைகேடாக நடந்துகொண்டதாக அவரை பதவி நீக்கம் செய்ய நாடாளு மன்றத்தில் அவர் மீது நேற்று முறைகேடு வாக்கெடுப்பு நடத்தப் பட்டது. அந்நாட்டின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் அந்த வாக்கெடுப் பில் வாக்களித்தனர். இனி அதிபர் பார்க் பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா அல்லது நீக்கப்படுவாரா என்பது பற்றி ஒன்பது நீதிபதிகள் கொண்ட குழு தீர்மானிக்கும். தென்கொரியாவின் முதல் பெண் அதிபர் பார்க் என்பது குறிப்பிடத்தக்கது. அந்நாட்டை 18 ஆண்டுகளாக தமது இரும்புப் பிடியில் வைத்திருந்த முன்னாள் அதிபர் பார்க் சுங்-ஹியின் முதல் புதல்விதான் அதிபர் பார்க்.