வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு ரஷ்யா ரகசியமாக உதவியுள்ளது என்று அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ தெரிவித்துள்ளது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை யில் இத்தகவல் வெளியாகி யுள்ளது. திரு டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷ்யா தலையிட்டு உதவியதாக அமெரிக்க உளவுத் துறை நம்புகிறது என்று அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கணினி ஊடுருவல் மூலம் தகவல்கள் திருடப்பட்டு அம்பலப் படுத்தப்பட்டதன் மூலம் திரு டிரம்ப்பின் வெற்றிக்கு ரஷ்யா உதவியிருப்பதாக உளவுத் துறை புகார் கூறியுள்ளது.
டிரம்ப் தேர்தல் வெற்றிக்கு ரகசியமாக உதவிய ரஷ்யா
1 mins read

