சோல்: தென்கொரிய அதிபர் மாளிகையைத் தாக்கி அழிப்பதற்கான ஒத்திகை ராணுவப் பயிற்சியில் வடகொரியா ஈடுபட்டதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பயிற்சியை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தொலைநோக்கி வழியாகப் பார்த்து ரசித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. "நம்மை எதிர்த்துத் தாக்குதல் நடத்தும் திறன் தென்கொரியாவிடம் இல்லை. இதுதவிர நமது தாக்குதலிலிருந்து தப்பித்து ஒளிந்து கொள்வதற்கும் அவர்களுக்கு வழியில்லை," எனக் கிம் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. வடகொரியா பயிற்சியில் ஈடுபட்ட வேளையில் தென்கொரிய ராணுவப் படைகளை விழிப்பு நிலையில் இருக்குமாறு தென்கொரிய அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தென்கொரிய அதிபர் மாளிகையைத் தகர்க்க வடகொரியா ராணுவப் பயிற்சி
1 mins read

