கென்யாவில் எண்ணெய் லாரி தீப்பற்றிக் கொண்டதில் 30 பேர் பலி

கென்யாவில் எண்ணெய் லாரி தீப்பற்றிக் கொண்டதில் 30 பேர் பலி

1 mins read
a342f527-c1eb-4d37-9867-690676bc8862
-

கென்யா தலைநகர் நைரோபியில் இருந்து நைவாஷா நகரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை வழியாக எண்ணெய் லாரி ஒன்று உகாண்டா நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது சனிக்கிழமை பின்னிரவு, நைவாஷா நகரின் வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் ஓட்டுநர் வாகன கட்டுப்பாட்டை இழந்தார். இதனால் அந்த எண்ணெய் லாரி, அந்தச் சாலையில் வந்த மற்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் லாரியில் இருந்த எண்ணெய் தீப்பற்றிக் கொண்டதும் வாகனங்கள் வெடித்துச் சிதறின. இந்தத் தீயில் வாகனங்களில் இருந்த 30 பேர் உடல்கருகி உயிரிழந்ததாகவும் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படம்: ஏஎஃப்பி