துருக்கியின் இஸ்தான்புல் நகரில் காற்பந்துத் திடலுக்கு அருகே இரு குண்டுகள் வெடித்ததில் 38 பேர் உயிரிழந்தனர்; 155 பேர் காயம் அடைந்தனர். குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் போலிஸ் அதிகாரிகள் என்று கூறப்படுகிறது. காற்பந்து திடலுக்கு அருகே கார் குண்டு வெடித்த இடத்தில் தடயவியல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்த போராளிகள் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் குர்தியப் போராளிக்ள அல்லது ஐஎஸ் போராளிகள் அத்தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று துருக்கிய அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். படம்: ஏஎஃப்பி
துருக்கி குண்டு வெடிப்புகளில் 38 பேர் பலி; 155 பேர் காயம்
1 mins read
-

