பணம் கேட்டு மிரட்டும் தாலிபான் இயக்கத்தினர்; அச்சத்தில் மக்கள்

பணம் கேட்டு மிரட்டும் தாலிபான் இயக்கத்தினர்; அச்சத்தில் மக்கள்

1 mins read
d95eba03-9b5f-49cc-b5ca-f142f25cf5f3
-

மிங்கோரா: பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத் தாக்குப் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் அப்துர் ரஹிம் என்ற கடைக்காரருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் தாலிபான் இயக்கத்தைச் சேர்ந்த மூத்த போராளி ஒருவர் பணம் கேட்டு மிரட்டியது அப்துர் ரஹிமை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்துர் ரஹிம் பணம் கொடுக்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவரைக் கொலை செய்துவிடுவதாக அந்தப் போராளி மிரட்டியதால் அவருக்குத் தற்பொழுது போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அண்மைய காலமாக பாகிஸ்தா னின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் உள்ளூர் மக்களிடம் பணம் கேட்டு போராளிகள் மிரட்டல் விடுப்பதும் குறிவைத்து சிலரைக் கொல்வதும் வாடிக்கையாகியுள்ளது. இது உள்ளூர் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.