வெள்ளப்பெருக்கு: வடகொரிய மக்கள் பாதிப்பு

வெள்ளப்பெருக்கு: வடகொரிய மக்கள் பாதிப்பு

1 mins read

சோல்: வடகொரியாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உயிர் தப்பிய ஆயிரக்கணக் கானோருக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாக அனைத்துலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் 600,000 பேர் பாதிக்கப் பட்டனர் என்றும் சுமார் 70,000 பேர் வீடுகளை இழந்தனர் என்றும் அனைத்துலக செஞ்சிலுவை சம்மேளனத்தின் தலைவர் கோனோ கூறியுள்ளார். குளிர்காலம் நெருங்குவதால் அவர்களுக்கு அடிப்படை நிவாரண உதவிகள் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.