அலெப்போ நகரம் முழுமையாக அரசாங்கப் படையின் கட்டுப்பாட்டில் வந்தது

அலெப்போ நகரம் முழுமையாக அரசாங்கப் படையின் கட்டுப்பாட்டில் வந்தது

1 mins read
e45d96d8-4a40-4844-8546-cc0323e51d6a
-

டமாஸ்கஸ்: அலெப்போ நகரம் முழுமையாக தங்கள் கட்டுப் பாட்டில் வந்திருப்பதாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. அலெப்போ நகரின் எஞ்சிய பகுதிகளையும் அதிபர் ஆசாத் தின் படை கைப்பற்றியதன் மூலம் அந்நகரம் மீண்டும் அரசாங்கப் படை வசம் வந்துள்ளது என்று ரஷ்யாவும் கூறியுள்ளது. அந்நகரைக் கைப்பற்ற இதுவரை மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை செவ்வாய்க் கிழமையுடன் முடிந்துவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அங்கு இப்போது சண்டை எதுவும் இல்லை என்று அந்நகர மக்களும் தெரிவித்துள்ளனர்.

அலெப்போ நகரில் இதுவரை நடந்த சண்டையில் காயமடைந்த வர்கள், அந்நகரைவிட்டு வெளி யேற விரும்பும் பொதுமக்கள் மற்றும் போராளிகள் அங்கிருந்து வெளியேற உடன்பாடு காணப் பட்டுள்ளது. சண்டை நடந்த பகுதியிலிருந்து அவர்கள் வெளியேற பேருந்துகள் தயாராக இருந்தும் வெளியேற்றும் நடவடிக்கை தாமதம் அடைந் துள்ளதற்கு சிரியா ராணுவமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

சண்டைக்குப் பயந்து வெளியேறிய மக்கள் அலெப்போ நகரத்தை அரசாங்கப் படையினர் தங்கள் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததும் அப்பகுதிக்கு திரும்பி வருகின்றனர். படம்: ஏஎஃப்பி