அன்வார் இப்ராகிமின் மேல்முறையீடு தோல்வி

அன்வார் இப்ராகிமின் மேல்முறையீடு தோல்வி

1 mins read

கோலாலம்பூர்: ஓரினப்புணர்ச்சி குற்றச்சாட்டு மற்றும் சிறைத் தண்டனைக்கு எதிராக மலேசியாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் செய்திருந்த மேல்முறையீட்டை மலேசிய உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஐந்து ஆண்டு கால சிறைத்தண்டனையை ரத்து செய்ய அன்வார் மேற்கொண்ட கடைசி முயற்சியும் தோல்வி அடைந்துள்ளது. அதனால் 2018 நடுப்பகுதி வரை அன்வார் சிறை வாசத்தைத் தொடர வேண்டும். ஆனால் முயற்சியைக் கைவிடப் போவதில்லை என்று அன்வார் இப்ராகிம் சூளுரைத் துள்ளார். "நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். இது முடிவல்ல. நான் என்னுடைய சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கையில் ஈடுபடுவேன்," என்று அவர் கூறியதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.