கோலாலம்பூர்: சரவாக்கில் மொத்தம் 1.4 பில்லியன் ரிங்கிட் செலவில் மூன்று பெரிய பாலங்கள் கட்டப்படும் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் கூறியுள்ளார். அந்தப் பாலங்கள் கட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அதற்கான கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டு ஆரம்பத்தில் தொடங்கும் என்றும் அவர் சொன்னார். பாடாங் சடோங் பால திறப்பு விழாவின்போது திரு நஜிப் புதிய பாலங்கள் கட்டும் திட்டம் பற்றி அறிவித்தார். மொத்தம் 231 மில்மியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில ஆண்டுகளில் சரவாக்கில் இரு முக்கிய சாலை கட்டமைப்புப் பணிகள் முடிவுறும் என்றும் திரு நஜிப் கூறினார்.
நஜிப்: சரவாக்கில் மூன்று பாலங்கள் கட்டப்படும்
1 mins read

