வியட்னாமில் வெள்ளப்பெருக்கு: 24 பேர் பலி

வியட்னாமில் வெள்ளப்பெருக்கு: 24 பேர் பலி

1 mins read
76b912c8-2f51-448b-8aa0-d23eef88fe63
-

ஹனோய்: வியட்னாம் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையிலும் வெள்ளப் பெருக்கிலும் சிக்கி குறைந்தது 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரி கள் தெரிவித்துள்ளனர். வெள்ளநீர் பல வீடுகளை சூழ்ந்துள்ளதால் குடியிருப் பாளர்கள் தவிக்க நேர்ந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் வியட்னாமில் இதுவரை இப்படி கனமழை பெய்ததில்லை என்று அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். கனமழையில் பயிர்கள் நாச மானதாக விவசாயிகள் கூறினர். 32 மில்லியன் டாலர் மதிப்புள்ள 32,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் நாச மனதாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.

குடியிருப்பாளர் ஒருவரின் வீட்டுக்கு முன்பு முழங்கால் அளவுக்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. படம்: ஏஎஃப்பி