இந்தோனீசியாவில் சைக்கிள் திருடியதற்காக 'அவமானப்படுத்தப்பட்ட' ஆஸ்திரேலியர்கள்

இந்தோனீசியாவில் சைக்கிள் திருடியதற்காக 'அவமானப்படுத்தப்பட்ட' ஆஸ்திரேலியர்கள்

1 mins read
5e4fb686-181e-4133-9d1d-70e9e1264858
Google News Preferred Icon

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் ஒரு சைச்சிளைத் திருடியதற்காக ஆல்திரேலிய சுற்றுலாப் பயணிகள் இருவருக்கு விநோதமான தண்டனை வழங்கப்பட்டது. "நான் திருடன். நான் செய்ததை யாரும் செய்யாதீர்கள்" என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டைகளை கழுத்தில் தொங்க விட்டபடி அவ்விருவரும் இந் தோனீசிய தெருக்களில் நடந்து செல்லுமாறு கட்டாயப்படுத்தப் பட்டனர். இந்தோனீசியாவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் பத்து நாட்களுக்கு முன்பு அவ்விருவரும் ஒரு சைக்கிளைத் திருடிச் சென்றதாகவும் அது குறித்து ஹோட்டல் நிர்வாகி புகார் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. கண்காணிப்பு கேமிரா மூலம் அவ்விருவரும் அடையாளம் காணப்பட்டு மறுநாள் கைது செய்யப்பட்டதாக போலிசார் கூறினர். அட்டைகளை கழுத்தில் தொங்கவிட்டபடி தெருக்களில் நடந்து செல்லும் இரு ஆஸ்திரேலியர்கள். படம்: இன்ஸ்டகிராம்