விழாக்கால தாக்குதல் திட்டம்: பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

விழாக்கால தாக்குதல் திட்டம்: பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக்கொலை

1 mins read

இந்தோனீசிய தலைநகர் ஜகார்த் தாவுக்கு வெளியே நேற்று நடை பெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப் பட்டனர். வெடிகுண்டு மூலம் நடத்தப்பட இருந்த தற்கொலைத் தாக்குதலை பயங்கரவாதத் தடுப்பு போலிசார் முறியடித்ததாக இந் தோனீசிய போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத் தின்போது அந்தத் தாக்குதல் நடத்தப்பட இருந்தது அதிகாரி களுக்குத் தெரியவந்ததைத் தொடர்ந்து தென் டங்கேராங் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்தப்பட்டதாக தேசிய போலிஸ் பேச்சாளர் ரிக்வாண்டோ செய்தியாளர்களிடம் கூறினார்.

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் புகுந்து, போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தும் அதி காரியை முதலில் கத்தியால் குத் திய பின்னர் பெரிய அளவிலான நாட்டு வெடிகுண்டுகளை வீசி நாசம் செய்ய அவர்கள் திட்டமிட்டு இருந்ததாக அவர் சொன்னார். கொல்லப்பட்ட மூவரும் ஐஎஸ் ஐஎஸ் போராளி அமைப்பின் ஆதர வாளர்கள் என சந்தேகிக்கப்படு வதாகக் கூறிய திரு ரிக்வாண்டோ, ஒரு சந்தேக நபர் உயிருடன் பிடிபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அந்த வீட்டில் ஐந்து வெடி குண்டுகளை அதிகாரிகள் கைப் பற்றினர்.