சீனாவை கடுமையாக விமர்சித்தவருக்கு உயர் பதவி: டோனல்ட் டிரம்ப் முடிவு

சீனாவை கடுமையாக விமர்சித்தவருக்கு உயர் பதவி: டோனல்ட் டிரம்ப் முடிவு

1 mins read
8fc866ab-4333-4095-a700-f19aa26b25ea
-

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் அடுத்த அதிபராக பொறுப்பு ஏற்கவிருக்கும் டோனல்ட் டிரம்ப், சீனாவை வெளிப்படையாக விமர்சிக்கும் பொருளியல் நிபுணர் பீட்டர் நவாரோவை தேசிய வர்த்தக மன்றத்தின் புதிய தலைவராக நியமித்துள்ளார். இதனால் வெள்ளை மாளிகை வர்த்தக மன்றத்துக்கு நவாரோ வழி காட்டுவதோடு வர்த்தக, தொழிற்துறை கொள்கையின் இயக்குநராகவும் செயல்படுவார். தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்புக்கு ஆலோசகராக இருந்த வர் நவாரோ. 'மரணத்தை விளைவிக்கும் சீனா' என்ற புத்தகத்தின் ஆசிரி யரான இவர், சீனாவின் கொள்கை களை கடுமையாக விமர்சித்துள் ளார். அதிபர் தேர்தலின்போது டோனல்ட் டிரம்ப் பல வர்த்தக பிரச்சினைகளை எழுப்பியிருந்தார். சீனா, மெக்சிகோவுடனான வர்த் தக உடன்பாடுகளையும் அவர் குறைகூறியிருந்தார்.

ஏற்கெனவே தைவான் அதிப ருடன் நேரடியாக தொலைபேசியில் பேசியதால் டிரம்ப் மீது சீனா கோபமடைந்துள்ளது. இந்த நிலையில் அமெரிக் காவின் வர்த்தகத்துக்கு முட்டுக் கட்டையாக சீனா தனது நாணயத் தின் மதிப்பை குறைத்து வைத் துள்ளது என்று அண்மையில் டுவிட்டர் தகவலில் டோனல்ட் டிரம்ப் சாடியிருந்தார்.