பெர்லின்: ஜெர்மன் தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் சந்தை யில் லாரியை ஓட்டி பலரைக் கொன்று குவித்த துனிசிய சந்தேக நபர் காவல்துறையால் கண்காணிக்கப்பட்டவர். அவருக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கர வாத அமைப்பின் ஆள்சேர்ப்பு குழுவுடன் தொடர்பு இருந்தது. ஜெர்மனியில் புகலிடம் கோரிய அவரது மனுவும் நிராகரிக்கப் பட்டது. இந்த நிலையில் இவரை வெளி யேற்றாமல் நாட்டில் தொடர்ந்து தங்க வைத்தது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளதால் ஜெர்மன் அதிகாரிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர். இவ்வாண்டு செப்டம்பர் வரையில் அனிஸ் அம்ரியை, வயது 24 காவல்துறையினர் பல மாதங்களாக கண்காணித்து வந்தனர். ஆயுதங்களுக்கு தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக பெர்லி னில் அவர் கொள்ளைகளில் ஈடுபட திட்டமிட்டதாகவும் சந்தே கிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அனிஸ் அம்ரி மீதான கண்காணிப்பை காவல்துறையினர் விலக்கிக் கொண்டனர்.
ஐரோப்பா முழுவதும் தேடப்படும் அனிஸ் அம்ரி. படம்: ஃபேஸ்புக்

