அம்மாவின் கைரேகையைப் பயன்படுத்தி பொக்கிமோன் வாங்கிய 6 வயது சிறுமி

அம்மாவின் கைரேகையைப் பயன்படுத்தி பொக்கிமோன் வாங்கிய 6 வயது சிறுமி

1 mins read
22762068-cbef-4c29-86cb-4aab26fee861
-

அர்கனாஸ்: அமெரிக்காவின் அர்கனாஸ் பகுதியில் வசிக்கும் பெத்னி ஹோவெல் களைப்பினால் சோபாவில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரது ஆறு வயது மகள் அ‌ஷிலிண்ட் அருகில் விளையாடிக்கொண்டிருந் தார். மறுநாள் தனது கைத்தொலைபேசியில் பொக்கிமோன் பொம்மை களை வாங்கியதற்கான 13 உறுதிச்சீட்டுகளைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி. முதலில் யாரோ தனது தொலைபேசி செயலியை ஊடுருவியதாக அவர் நினைத்தார்.

விசாரித்த பிறகுதான் தனது மகள் அவற்றை வாங்கியது அவருக்குத் தெரிய வந்தது. தூங்கிக்கொண்டிருந்த அம்மாவின் கைரேகையைப் பயன்படுத்தி ஐபோனைச் செயல்படவைத்து, அமசோன் இணையத் தளத்தில் யுஎஸ் $250 (சிங்கப்பூர் வெள்ளி 363) மதிப்புள்ள பொக்கிமோன் பொம்மைகளைச் சிறுமி வாங்கியுள்ளார். பெத்னி ஹோவெலின் கடன் அட்டை விவரங்களும் முகவரியும் முன்பதிவு செய்யப்பட்டிருந்ததால், சிறுமியால் இணையத்தில் பொருட்களை வாங்க முடிந்துள்ளது. -அமசோன் நான்கு பொருட்களை மட்டுமே திரும்பப் பெற ஒத்துக்கொண்டுள்ளது.

பொக்கிமோன் பொம்மைகளு டன் ஆறு வயது அ‌ஷிலிண்ட். படம்: டெய்லி மெயில்