அபே: ஜப்பான் இனி ஒருபோதும் போர் புரியாது

பெர்ல் ஹார்பர்: ஜப்பான் இனிமேல் போரில் ஈடுபடாது என்று ஜப் பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபே உறுதியளித்துள்ளார். அமெரிக்காவை இரண்டாம் உலகப் போரில் ஈடுபடத் தூண்டிய சம்பவமான 75 ஆண்டுகளுக்கு முன்னர் பெர்ல் ஹார்பரில் ஜப்பான் நடத்திய எதிர்பாரத வான்வெளித் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு என்றென்றைக்குமான ஆழ்ந்த இரங்கலை அபே தெரிவித்தார். தாக்குதலுக்கு அபே மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால், போரின் பயங்கரத்தை இனி எப்போதுமே ஏற்படுத்துவ தில்லை என்ற மாறாத கொள்கையை ஜப்பான் கொண் டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ஆண்டு நிகழ்வில் நேற்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் ஜப்பானியப் பிரதமரும் பங்கேற்றார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வில் பங்கேற்ற முதல் ஜப்பானியப் பிரதமரான அபே, "போரின் பயங்கரத்தை நாங்கள் இனி எப்போதுமே நிகழ்த் தக்கூடாது. ஜப்பான் நாட்டு மக்கள் எடுத்துக்கொண்டுள்ள உறுதிமொழி. "யுஎஸ்எஸ் அரிசோனாவில் அமைதி கொண் டிருக்கும் வீரர்களின் ஆத்மாவுக் கும் அமெரிக்க மக்களுக்கும், உலக மக்களுக்கும் ஜப்பானியப் பிரதமராக நான் இந்த உறுதியை எடுத்துக்கொள்கிறேன்," என்று கூறினார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் ஜப்பானியப் பிரதமர் ‌ஷின்சோ அபேயும் பெர்ல் ஹார்பரில் உள்ள 'யுஎஸ்எஸ் அரிசோனா' நினைவிடத்துக்கு எதிரே அமைக்கப்பட்டுள்ள மேடையில் உரையாற்றினர். பெர்ல் ஹார்பர் தாக்குதலில் தப்பிய போர் வீரர்களையும் அவர்கள் சந்தித்தனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!